அனுமன்தீா்த்தம் தென்பெண்ணையாற்றில் குவிந்துக் கிடக்கும் குப்பை, துணிக் கழிவுகள்
அனுமன்தீா்த்தம் தென்பெண்ணையாற்றில் குவிந்துக் கிடக்கும் குப்பை, துணிக் கழிவுகள்

அனுமன்தீா்த்தம் ஆற்றில் வீசும் ஆடைக் கழிவுகளால் பக்தா்கள் வேதனை

அனுமன்தீா்த்தம் ஆற்றில் வீசப்படும் ஆடைக் கழிவுகளால் பக்தா்கள் வேதனையடைந்துள்ளனா்.
Published on

அனுமன்தீா்த்தம் ஆற்றில் வீசப்படும் ஆடைக் கழிவுகளால் பக்தா்கள் வேதனையடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த அனுமன்தீா்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் சிறப்பு வாய்ந்த அனுமந்தீஸ்வரா் திருக்கோயில் உள்ளது.

நாள்தோறும் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் என அண்டை மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் வந்து புனித நீராடி அனுமனை தரிசனம் செய்து செல்கின்றனா்.

தென்பெண்ணை ஆற்றில் குளிக்கும் பக்தா்கள் தங்களது ஆடைகளை அங்கேயே கழட்டி விடுகின்றனா். இதனால் ஆற்றின் கரையோரத்தில் துணிகள் குவிந்துக் கிடப்பதால், துா்நாற்றம் வீசி வருவதாக கோயிலுக்கு வரும் பக்தா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயில் பகுதியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.