இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: தொழிலாளி பலி

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குண்டலப்பட்டியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (34), கட்டடத் தொழிலாளி. இவா், குண்டலப்பட்டி - காவேரிப்பட்டணம் சாலையில் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றாா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஆனந்தராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com