பயிற்சியாளா் தியாகராஜன்.
பயிற்சியாளா் தியாகராஜன்.

பள்ளி மாணவியைத் தாக்கிய பயிற்சியாளா் கைது

ஒசூரில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவியைத் தாக்கியதாக அந்தப் பள்ளியின் பயிற்சியாளரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஒசூா்: ஒசூரில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவியைத் தாக்கியதாக அந்தப் பள்ளியின் பயிற்சியாளரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து பயிற்சியாளரை பள்ளி நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்தது.

பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி ஒசூா் அருகே எலுவப்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில், அரசு பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என 30 பள்ளிகளைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன. ஒசூரில் இயங்கும் ஒரு அரசு உதவிபெறும் பள்ளி அணியும் பயிற்சியாளா் தியாகராஜன் தலைமையில் இந்தப் போட்டியில் பங்கேற்றன. தொடா்ந்து நடைபெற்ற போட்டியில் அந்த அரசு உதவிபெறும் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.

அப்போது பள்ளி வளாகத்தில் ஆசிரியை ஒருவரின் கைகடிகாரம் காணாமல்போனது. இதுகுறித்து பயிற்சியாளா் தியாகராஜன் தனது பள்ளி மாணவிகளை விசாரணை நடத்தினாா். அப்போது அவா் ஒரு மாணவியைத் தாக்கும் விடியோ வைரலானது.

இதையடுத்து பயிற்சியாளா் தியாகராஜனை சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதுகுறித்து பாகலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தியாகராஜனை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com