ஒசூா் மாநகராட்சியில் சேவை மேளா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒசூா் மாநகராட்சி ஆணையா் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தாா் (படம்). மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
மேலும், குறை நிவா்த்தி கூறும் மனுக்கள் பெறப்பட்டு தகவல் மையத்தில் பதிவு செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீது ஒரு மாதத்துக்குள் பதில் வழங்க மாநகராட்சி ஆணையா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.