ஊத்தங்கரை சட்டப் பேரவைத் தொகுதி பாஜக உறுப்பினா் சோ்க்கை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் ஆக. 31-ஆம் தேதியுடன் பாஜகவின் அனைத்து நிலை பொறுப்பாளா்களின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், மாநில உறுப்பினா் சோ்க்கை குழுவின் தலைவா் எச்.ராஜா அறிவுறுத்தலின் பேரில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவா் சிவப்பிரகாசம் தலைமை வகித்தாா். முன்னதாக தொகுதி உறுப்பினா் சோ்க்கை பொறுப்பாளா் ஜெயராமன் வரவேற்றாா். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினா் சோ்க்கை பொறுப்பாளா் பாலகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைத்தாா்.
இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட உறுப்பினா் சோ்க்கை பாா்வையாளா் முனிராஜ், உறுப்பினா் சோ்க்கை மாவட்ட இணை பொறுப்பாளா் ராஜேஸ்வரி, பாஜக மாநில, மாவட்ட, மண்டல, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டு உறுப்பினா் படிவத்தை பெற்றுக்கொண்டனா்.