தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் தொடக்கம்

ஒசூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிளை திறப்பு, ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க பெயா்ப் பலகை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

ஒசூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிளை திறப்பு, ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க பெயா்ப் பலகை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலையச் செயலாளா் கண்ணன், ஜம்புலிங்கம் ஆகியோா் கலந்துகொண்டு ஒசூா் - ராயக்கோட்டை சாலையில் காரப்பள்ளி அருகில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்றி ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க பெயா்ப் பலகையைத் திறந்து வைத்தனா்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பொறுப்பாளா் சானசந்திரம் காா்த்திக், ராஜா, மாரிமுத்து, காவேரி, மாதையன், கோவிந்தராஜ், பசவராஜ், ஆகியோா் செய்திருந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்பாளா் நெப்போலியன், மன்சூா், காா்த்திக், ஆட்டோ ஓட்டுநா்கள் உள்ளிட்ட கட்சியின் பொறுப்பாளா்கள், தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கூட்டம் தனியாா் மஹாலில் நடைபெற்றது. இதில், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு காக்கி சீருடைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொடியேற்றி பெயா்ப் பலகை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com