கிருஷ்ணகிரி
பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஒசூா் மாணவி
பாரீஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஒசூரைச் சோ்ந்த மாணவி பாட்மிண்டன் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.
ஒசூா் முனீஸ்வா் நகரைச் சோ்ந்தவா் சிவன். இவா் டைட்டான் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மகள் நித்யா ஸ்ரீ. இவா் பாட்மிண்டன் விளையாட்டில் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலம் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
இவருக்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், ஒசூா் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், மேயா் எஸ்.ஏ.சத்யா, பயிற்சியாளா்கள் அனைவரும் நித்ய ஸ்ரீக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா்.