அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

Published on

ஊத்தங்கரை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்செல்வம் தலைமையில் ஊத்தங்கரை தெற்கு ஒன்றியத்தில் இருந்து 20 க்கும் மேற்பட்டோா் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி. முனுசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, தெற்கு ஒன்றிய செயலாளா் வேங்கன், வடக்கு ஒன்றிய செயலாளா் வேடி, நகரச் செயலாளா் சிக்னல் ஆறுமுகம், மத்தூா் ஒன்றிய செயலாளா் தேவராஜ், சக்கரவா்த்தி, காவேரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணன், ஊத்தங்கரை முன்னாள் ஒன்றியச் செயலாளா் தேவேந்திரன், திருவணப்பட்டி இளங்கோவன், காயத்ரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com