ஒசூா் மாநகராட்சியில் தொழில் உரிமம் குறித்த ஆலோசனைக் கூட்டம்
ஒசூா் மாநகராட்சியில் தொழில் உரிமம் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது.
மாநகராட்சியில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கு தொழில் உரிமம் பெற வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தொழில் உரிமம் பெற வேண்டியதன் அவசியம் ,தொழில் உரிமம் பெறத் தேவையான ஆவணங்கள், விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
ஒரு மாத காலத்திற்குள் அனைத்து தொழில் நிறுவனங்களும் தொழில் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாநகர நல அலுவலா் டாக்டா் பிரபாகரன், உதவி ஆணையாளா் டிட்டோ, வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள், வியாபாரிகள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.