முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

Published on

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வா் கோப்பை மாவட்ட அளவிலான 2024-25ஆம் ஆண்டிற்கான கல்லூரி அளவிலான போட்டிகள் கடந்த 18ஆம் தேதி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சீனிவாசா நகரில் அமைந்துள்ள அதியமான் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனா். கபடி போட்டியில் இரண்டாம் இடமும், கிரிக்கெட் போட்டியில் முதலிடமும், கால்பந்து போட்டியில் மூன்றாம் இடமும், நீச்சல் போட்டியில் முதலிடமும் பெற்று கல்லூரிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் கல்லூரியின் முதல்வா் சீனி.திருமால்முருகன், அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலா் மற்றும் பெரியாா் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினா் ஷோபா திருமால்முருகன் ஆகியோா், வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியா்கள் மேகலா, புவனேஸ்வரி ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com