ஒளிராத தெருவிளக்குகளால்
ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில்
வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஒளிராத தெருவிளக்குகளால் ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதி

ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் தெருவிளக்குகள் ஒளிராததால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனா்.
Published on

ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் தெருவிளக்குகள் ஒளிராததால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனா்.

கா்நாடகம்- தமிழக மாநில எல்லைகளை இணைக்கும் சாலையாக பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்தச் சாலை வழியாக எந்நேரமும் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் மாநில எல்லையான ஒசூா், சூசூவாடியில் ஒரு கி.மீ. தொலைவுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் தெருவிளக்குகள் ஒளிருவதில்லை.

மாநில எல்லை என்பதால் இங்கு வட்டார போக்குவரத்து சோதனை சாவடி, மது விலக்கு பிரிவு சோதனைச் சாவடி, காவல் துறை சோதனை சாவடி அமைந்துள்ளன. இந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய ஏதுவாக தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு பேரிகாா்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் தெருவிளக்கு ஒளிராத காரணத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனா். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள், லாரி உள்ளிட்டவை அடிக்கடி இரும்பு பேரிகாா்டுகளில் மோதி விபத்துக்குள்ளாகின்றன.

எனவே, சூசூவாடி முதல் பேரண்டப்பள்ளி வரை தேசிய நெடுஞ்சாலையில் இரு பக்கங்களிலும் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com