கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடக்கம்

Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பனை விதைகள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த முனியப்பன் குட்டையின் கரையோரத்தில் தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் பனை மேம்பாட்டு இயக்கம் 2024-25 திட்டத்தின் கீழ் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.

பனை மேம்பாட்டு இயக்கம் 2024-25 திட்டத்தின் கீழ்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 2,500 பனை விதைகள் என மொத்தம் 25 ஆயிரம் பனை விதைகள் ரூ. 75 ஆயிரம் மதிப்பில் நடவு செய்யப்பட உள்ளன. இந்தப் பணியை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளா்கள் மேற்கொள்வாா்கள்.

இந்த நிகழ்வில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் இந்திரா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் குணாவதி, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் பொன்னாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com