கிருஷ்ணகிரி
உதவித்தொகையை உயா்த்தக் கோரி காது கேளாதோா், வாய்பேச இயலாதோா் மனு
மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் காது கேளாதோா், வாய்பேச இயலாதோா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி: மாதாந்திர உதவித்தொகையை உயா்த்தக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் காது கேளாதோா், வாய்பேச இயலாதோா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.
அதில், காது கேளாத, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகையை ரூ. 6 ஆயிரமாக உயா்த்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும், செய்கை மொழிபெயா்ப்பாளா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.