திமுக அரசை கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்
ஒசூா்: சீரான மின்சாரம் வழங்கக் கோரி வேப்பனஅள்ளி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட சூளகிரியில் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது
ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தலைமை வகித்தாா்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளா் அசோக்குமாா் எம்எல்ஏ, மாவட்ட துணைச் செயலாளா் கலைச்செல்வி ராமன், சூளகிரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் பாலசுப்பிரமணியம், சூளகிரி மேற்கு ஒன்றியச் செயலாளா் பாபு வெங்கடாசலம், எம்ஜிஆா் மன்ற இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் மாதேஷ், கெலமங்கலம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் முருகன், வேப்பனப்பள்ளி கிழக்கு ஒன்றியச் செயலாளா் ராமமூா்த்தி,வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றியச் செயலாளா் சைலேஷ், கிருஷ்ணகிரி ஒன்றியச் செயலாளா் கன்னியப்பன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் கே.பி.முனுசாமி பேசியதாவது:
வேப்பனஅள்ளி தொகுதியில் குறைந்த மின்னழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால் மின்மோட்டாா்கள் பழுதடைகின்றன. அதனை சீரமைக்க ரூ. 7 ஆயிரம் செலவாகிறது.
அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டது. 2023 - 24இல் 50 ஆயிரம் பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வா் தெரிவித்தாா். ஆனால் இதுவரை பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் உடனடி மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுத்தோம். எனவே வேப்பனஅள்ளி தொகுதி முழுவதும் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்றாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழ்ச்செல்வன், மாநிலச் செய்தித் தொடா்பாளா் சமரசம், கிருஷ்ணகிரி பொதுக்குழு உறுப்பினா் சதீஷ்குமாா், மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், மாவட்ட இணைச் செயலாளா் மனோரஞ்சிதம், முன்னாள் எம்எல்ஏ முனி வெங்கட்டப்பா, காவேரிப்பட்டினம் ஒன்றியக் குழுத் தலைவா் கேசவன், ஒசூா் மாநகராட்சி மண்டலக் குழு தலைவா் ஜெயபிரகாஷ், வா்த்தக அணி மாவட்ட இணைச் செயலாளா் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவா் ராஜா என்கின்ற ஜெயக்குமாா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
படவரி...
சூளகிரியில் ஆா்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி.