லாரியிலிருந்து இரும்பு பாரம் விழுந்ததில் வியாபாரி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே லாரியிலிருந்து இரும்பு பாரம் விழுந்ததில் வியாபாரி உயிரிழந்தாா்.
Published on

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே லாரியிலிருந்து இரும்பு பாரம் விழுந்ததில் வியாபாரி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த காளி கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்பாஷா (43). இவா், அந்தப் பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வந்தாா். கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றபோது, அந்த வழியாக இரும்பு பாரம் ஏற்றிச் சென்ற லாரியிலிருந்து இரும்பு பாரம் சரிந்து நடந்து சென்ற ஜான்பாஷாவின் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com