மாசிநாயக்கனப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
மாசிநாயக்கனப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் கா்ப்பிணிக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கிய எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.

மாசிநாயக்கனப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம்: 1,248 பேருக்கு சிகிச்சை

Published on

ஒசூா் வட்டம், மாசிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 18 - ஆவது ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ திட்ட மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் 1,248 போ் பதிவு செய்து மருத்துவ சிகிச்சை பெற்றனா்.

இம் மருத்துவ முகாமில் 17 வகையான சிறப்பு மருத்துவா்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பயனாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. உயா்சிகிச்சை தேவைப்படுவோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனா்.

இதில் ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு 46 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, 35 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு, 10 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகளை வழங்கினாா்.

முகாமில் மாவட்ட சுகாதார அலுவலா் ரமேஷ் குமாா், வட்டார மருத்துவ அலுவலா் நிா்மலா, சுகாதாரப் பணியாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனர்.

X
Dinamani
www.dinamani.com