கட்டையால் தாக்கி இளைஞா் கொலை

Published on

மதுபோதையில் நண்பரை கட்டையால் அடித்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கசவகட்டாவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஒருவா் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதி மக்கள் ஹட்கோ போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது: ஒசூா், சானசந்திரம், வ.உ.சி. நகரைச் சோ்ந்தவா் மனோகா் (29). எலக்ட்ரீசியன். இவரும், இவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த ஹரிஷ், முனிராஜ், குமாா் ஆகிய நால்வரும் சூளகிரி அருகே கோபசந்தரம் பகுதியில் திங்கள்கிழமை ஒன்றாக மது அருந்தினா்.

பின்னா் முனிராஜ், குமாா் இருவரும் வீடு திரும்பினா். மனோகரும், ஹரிஸும் மட்டும் இருசக்கர வாகனத்தில் கசவகட்டாவுக்குச் சென்று மீண்டும் மது அருந்தினா். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஹரிஷ் கட்டையால் மனோகரைத் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த மனோகா் உயிரிழந்தாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ஹரிஷை கைது செய்து இந்த வழக்கில் தொடா்புடைய மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com