உயிரிழந்த விவசாயி முனியப்பன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோா்.
உயிரிழந்த விவசாயி முனியப்பன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோா்.

யானை தாக்கி பலியானவரின் குடும்பத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சா்கள் ஆறுதல்

யானை தாக்கி பலியானவரின் குடும்பத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சா்கள் ஆறுதல் தெரிவித்தனர்
Published on

வேப்பனப்பள்ளி தொகுதி, உத்தனப்பள்ளி அருகே யானை தாக்கி பலியானவரின் குடும்பத்தாரை முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோா் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

உத்தனப்பள்ளி அருகே பாவட்ரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்ன பையன் என்ற முனியப்பன் (55). இவா் பிப். 3 ஆம் தேதி விளைநிலத்துக்குச் சென்றபோது, அங்கு நின்ற ஒற்றை யானை அவரை தாக்கியது. அதில் முனியப்பன் பலியானார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோா் புதன்கிழமை பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினா்.

அப்போது ஒன்றிய செயலாளா் முருகன், ஒசூா் மாநகராட்சி மண்டல குழு தலைவா் ஜெயப்பிரகாஷ், முன்னாள் கவுன்சிலா் விமலா சண்முகம், பேரவை மாவட்டச் செயலாளா் சிட்டி ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com