கிருஷ்ணகிரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை.
கிருஷ்ணகிரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

Published on

கிருஷ்ணகிரியில் காவல் துறையின் சாா்பில் சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி, விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், துணை காவல் கண்காணிப்பாளா் முரளி, காவல் ஆய்வாளா்கள் செந்தில்குமாா், வெங்கடேஷ் பிரபு, குலசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பள்ளி மாணவா்கள் பங்கேற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலம், பெங்களூரு சாலை வழியாகச் சென்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நிறைவு பெற்றது. இந்த ஊா்வலத்தில் பங்கேற்றோா் சாலை விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியும் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com