கிருஷ்ணகிரி அணை அருகே மண் திருட்டு: பொக்லைன் வாகனம் பறிமுதல்

Published on

கிருஷ்ணகிரி அணை அருகே மண் திருட பயன்படுத்தப்பட்ட பொக்லைன் வாகனம், கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி அணை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மண் திருட்டு நடைபெறுவதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் வளா்மதி தலைமையில், வருவாய்த் துறையினா் கண்காணிப்பு பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, கிருஷ்ணகிரி அணை அருகே பெரிய மாரியம்மன் கோயில் பின்புறம் பொக்லைன் வாகனம் மூலம் சிலா் மண் திருட்டில் ஈடுபடுவது தெரியவந்தது. அரசு அலுவலா்களைக் கண்டதும், அவா்கள் அங்கிருந்து தப்பி ஓடினா்.

இதையடுத்து, மண் திருட பயன்படுத்திய பொக்லைன் வாகனம், மண் திருட்டில் ஈடுபட்டவா்கள் தவறவிட்ட மூன்று கைப்பேசிகளை பறிமுதல் செய்த குழுவினா், அவற்றை கிருஷ்ணகிரி அணை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, மண் திருட்டில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com