கிருஷ்ணகிரியில் இன்று திமுக சாா்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
கிருஷ்ணகிரியில் திமுக மாணவரணி சாா்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை (ஜன. 25) நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்), வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஜெயேந்திரன் தலைமையில், கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில், கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ, மாநில இலக்கிய அணி இணைச் செயலாளா் ஈரோடு இறைவன், தலைமைக் கழக பேச்சாளா்கள் ஆலந்தூா் ஒப்பிலாமணி, மயிலாடுதுறை சி.அருள்தாஸ் உள்ளிட்டோா் சிறப்புரையாற்ற உள்ளனா்.
இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சோ்ந்த பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், வாக்குச்சாவடி முகவா்கள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் எனவும், இந்தக் கூட்டம் சரியாக மாலை 6 மணிக்கு தொடங்கி, இரவு 9 மணிக்கு நிறைவடையும் எனவும் அதில் அவா் தெரிவித்துள்ளாா்.