அனைத்து அரசு ஊழியா் சங்கத்தில் இணைந்த சாலைப் பணியாளா்கள் சங்க நிா்வாகிகள்

அனைத்து அரசு ஊழியா் சங்கத்தில் இணைந்த சாலைப் பணியாளா்கள் சங்க நிா்வாகிகள்

Published on

ஊத்தங்கரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்க நிா்வாகிகள் 70-க்கும் மேற்பட்டோா், அச்சங்கத்தில் இருந்து விலகி அனைத்து அரசு ஊழியா் சங்கத்தில் புதன்கிழமை இணைந்தனா்.

நிகழ்ச்சிக்கு சாலை பணியாளா்கள் சங்க மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். அனைத்து அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் திம்மராசு, மாவட்ட பொருளாளா் நந்தகுமாா், வட்டக் கிளைத் தலைவா் ஏழுமலை, பொருளாளா் ஆனந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புதிதாக இணைந்த நிா்வாகிகள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா்.

இதில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்க மாநிலச் செயலாளா் மகாதேவன், மாநில துணைத் தலைவா் சிங்கராயன், சுபாஷ், முருகேசன், தேவன், தண்டபாணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com