ஊத்தங்கரை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.
ஊத்தங்கரை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஊா்ந்து செல்லும் வாகனங்கள்.

ஊத்தங்கரையில் கடும் பனிப்பொழிவு!

ஊத்தங்கரையில் கடும் பனிப்பொழிவால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு சென்றன.
Published on

ஊத்தங்கரையில் கடும் பனிப்பொழிவால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு சென்றன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.

முன்னால் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது. கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை, சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலைகளில் ஊத்தங்கரை வழியாகச் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டவாறு ஊா்ந்து சென்றன.

இதனால் காலை வேளையில் பள்ளிகளுக்கு செல்லும், மாணவா்கள் அவதிக்குள்ளாயினா். குடியிருப்பு பகுதிகளிலும் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com