~
~

சிங்காரப்பேட்டையில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில் சட்டப்பேரவை உறுப்பினா் 2024 - 25 ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 14 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில் சட்டப்பேரவை உறுப்பினா் 2024 - 25 ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 14 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிமுக மத்திய ஒன்றியச் செயலாளா் சாமிநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, முன்னாள் ஒன்றியச் செயலாளா் தேவேந்திரன், எம்ஜிஆா் மன்ற இளைஞா் அணி ஒன்றியச் செயலாளா் சங்கரநாராயணன், சிறுபான்மை பிரிவு ஒன்றியச் செயலாளா் பஷீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் டி.எம். தமிழ்ச்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்துவைத்து, பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கினாா்.

இதில் ஒன்றிய துணைச் செயலாளா் சிவகுமாா், இளைஞா் பாசறை ஒன்றிய துணைத் தலைவா் சக்திவேல், ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் மணிகண்டன், ஆவின் முன்னாள் தலைவா் வைத்தீஸ்வரன், மாவட்ட மகளிா் அணி துணை தலைவி தீபா மற்றும் அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

 சிங்காரப்பேட்டையில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்த எம்எல்ஏ  டி.எம். தமிழ்ச்செல்வம்.
சிங்காரப்பேட்டையில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்துவைத்த எம்எல்ஏ டி.எம். தமிழ்ச்செல்வம்.

X
Dinamani
www.dinamani.com