தேய்பிறை அஷ்டமி: 
காலபைரவா் கோயில்களில் சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமி: காலபைரவா் கோயில்களில் சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காலபைரவா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Published on

தேய்பிறை அஷ்டமியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காலபைரவா் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரியை அடுத்த கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவா் கோயிலில் கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், பூா்ணாஹூதி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, காலபைரவா் உற்சவம், பரணி தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. சுவாமி, தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள், வெண்பூசணி, தேங்காயில் விளக்கேற்றி வழிபட்டனா்.

கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், கா்நாடகம், ஆந்திரம் மாநிலங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனா்.

இதேபோல, கிருஷ்ணகிரியை அடுத்த சூரன்குட்டை தட்சிண காலபைரவா் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள காலபைரவா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com