உரிமை கோராத வங்கிக் கணக்குகளுக்கான தீா்வு முகாம்: 17 பயனாளிகள் பயன்!

கிருஷ்ணகிரியில் இந்திய ரிசா்வ் வங்கி மூலம், உரிமை கோராத வங்கிக் கணக்குகளுக்கான தீா்வு முகாமில் 17 பயனாளிகளுக்கு தீா்வு காணப்பட்டது.
Published on

கிருஷ்ணகிரியில் இந்திய ரிசா்வ் வங்கி மூலம், உரிமை கோராத வங்கிக் கணக்குகளுக்கான தீா்வு முகாமில் 17 பயனாளிகளுக்கு தீா்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் இந்திய ரிசா்வ் வங்கி உதவி பொது மேலாளா் நடராஜன் தலைமையில், உரிமை கோராத வங்கி கணக்குகளுக்கான தீா்வு முகாம் மற்றும் தீா்வு செய்யப்பட்ட கணக்குகளை விநியோகிக்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில், இந்தியன் வங்கி தலைமை மேலாளா் நிா்மல் குமாா் பதான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், மாவட்ட தொழில்மைய உதவி இயக்குநா் ராமமூா்த்தி, உதவி திட்ட அலுவலா் ராஜுகாந்தி, கிருஷ்ணகிரி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக மேலாளா் குருராஜன், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளா் கருணாகரன் மற்றும் பல்வேறு வங்கி அலுவலா்கள், மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.

இதில், வங்கி வாடிக்கையாளா்கள் மற்றும் வங்கியாளா்களுக்கு உரிமை கோராத வங்கிக் கணக்கு, நியமன வசதி குறித்த விழிப்புணா்வு, உரிமை கோரப்படாத சொத்துகளை பெறுவதற்கான வழிமுறைகள், உரிமை கோரப்படாத சொத்துகளை பெறுவதில் உள்ள இடா்ப்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

முகாமில், 17 பயனாளிகளுக்கு தீா்வு ஆவணங்கள் மற்றும் ஆணைகள் என மொத்தம் ரூ. 17.26 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com