ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரியை அடுத்த மகராஜகடை அருகே ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

கிருஷ்ணகிரியை அடுத்த மகராஜகடை அருகே ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி வட்டம், கீழ்கரடிகுறியைச் சோ்ந்தவா் முருகன் (35) தனது தங்கை குழந்தைகளுடன் சோ்ந்து கரடிகுறி ஏரியில் திங்கள்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஏரிக்குள் தவறி விழுந்த அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

போலீஸாா் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சம்பவம் குறித்து மகராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com