முதல்வா் நாளை ஒசூா் வருகை: ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (அக்.10) ஒசூா் வருவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (அக்.10) ஒசூா் வருவதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கா்நாடக மாநிலம், பெங்களூரு செல்வதற்காக வழியில் ஒசூா் பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனேஜா விமான ஓடுதளத்துக்கு அக்.10-ஆம் தேதி வருகிறாா். இவரது வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ஒசூா், தேன்கனிக்கோட்டை வட்டங்கள் உள்பட மாவட்டத்தில் சிவில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வா் வருகையின்போது பாதுகாப்புக் கருதி விமான ஓடுதளம், பயண பாதைகள் தமிழ எல்லைவரை சிவில் ட்ரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. 2 கிலோ மீட்டா் தொலைவில் வெள்ளிக்கிழமை சிவில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பை மீறி ட்ரோன்களை இயக்கும் நபா்கள் மீது தமிழ்நாடு காவல் துறை சட்டம் 2013 மற்றும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023-இன் பிரிவு 163 ஆவது சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com