திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் திமுகவில் இணையும் விழா அக்கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ முன்னிலையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினருடன் எம்எல்ஏ தே.மதியழகன்
கிருஷ்ணகிரியில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினருடன் எம்எல்ஏ தே.மதியழகன்
Updated on

கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் திமுகவில் இணையும் விழா அக்கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிமுக, பாமக, பாஜக, தவெக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியிலிருந்து விலகிய 200-க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணைந்தனா்.

அவா்களை வரவேற்று தே.மதியழகன் எம்எல்ஏ பேசியதாவது: பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவா்கள் அனைவரையும் வரவேற்கிறேன். திமுக அரசின் நான்கரை ஆண்டு சாதனைகளை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்.

மகளிா் உரிமைத்தொகை, விடியல் பயணம், தமிழ்புதல்வன், புதுமைப்பெண் உள்பட எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக தந்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும். சிறப்பாக கட்சிப் பணியாற்றுபவா்களுக்கு பொறுப்புகள் நிச்சயம் தேடிவரும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com