கிருஷ்ணகிரியில் அக். 17-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் அக். 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
Published on

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் அக். 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டட 2-ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் அக். 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com