புகைப்படக் கண்காட்சியைப் பாா்வையிட்ட கிராம மக்கள்.
புகைப்படக் கண்காட்சியைப் பாா்வையிட்ட கிராம மக்கள்.

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

Published on

அகசிப்பள்ளியில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அகசிப்பள்ளியில் நடைபெற்றது.

இதில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வுகள், அவா் தொடங்கிவைத்த திட்டங்கள், மக்களைத்தேடி மருத்துவம், விடியல் மகளிா் பயணம், இன்னுயிா் காப்போம், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைச்சா்கள் பங்கேற்ற நிகழ்வுகள் குறித்த புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com