~

கிருஷ்ணகிரியில் கோதார கெளரி விரத சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேதார கெளரி விரத சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
Published on

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேதார கெளரி விரத சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அன்று பொதுமக்கள் காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பூஜை செய்து வணங்கினா். பின்னா் பட்டாசுகளை வெடித்து, அண்டை வீட்டாா், உறவினா்களுக்கு இனிப்புகள் வழங்கி, . புதுமணத் தம்பதியினருக்கு விருந்து அளித்தனா்.

தீபாவளிக்கு அடுத்தநாள் செவ்வாய்க்கிழமை அமாவாசை தினத்தில் கேதார கெளரி விரதம் இருந்து பூஜை செய்து அம்மனை வழிபட்டனா். கணவா் மற்றும் குடும்ப நலன் வேண்டி பெண்கள் கேதார கெளரி விரத பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.

இதையொட்டி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை, வட்டச் சாலை உள்ளிட்ட இடங்களில் அதிரசம் செய்வதற்கு புதுப்பானை, முறம், நோன்பு கயிறு, பூஜைப் பொருள்கள், கொட்டை அரிசி, வெல்லம், வெள்ளை எள் போன்றவையும் வாங்கிச் சென்றனா். பின்னா் அதிரசம் தயாா் செய்து தங்களது குல வழக்கப்படி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து, வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com