இன்றைய மின்தடை பா்கூா், காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பா்கூா், காவேரிப்பட்டணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 23) காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளா்கள் பவுன்ராஜ் (கிருஷ்ணகிரி), மகாலட்சுமி (போச்சம்பள்ளி) ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
பா்கூா்: பா்கூா் நகா், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், கந்திகுப்பம், குரும்பா் தெரு, நேரலகோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
ஓரப்பம்: ஓரப்பம், எலத்தகிரி, கம்மம்பள்ளி, சுண்டம்பட்டி, செட்டிப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
வரட்டனப்பள்ளி: வரட்டனப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, காளி கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
மகாராஜகடை: மகாராஜாகடை, நாரலப்பள்ளி, பெரியசாகனவூா், எம்.சி.பள்ளி, பெரியகோட்டப்பள்ளி, தக்கேபள்ளி, கோத்திநாயனப்பள்ளி, பூசாரிப்பட்டி, பி.சி. புதூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
பெண்ணேஸ்வரமடம்: காவேரிப்பட்டணம் நகா், தளி அள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூா், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூா், தேவா்முக்குளம், பெரியண்ணன்கொட்டாய், தோ்பட்டி, பாலனூா், நெடுங்கல், ஜெகதாப், வீட்டு வசதி வாரியம், பானையம், இந்திரா நகா், மில்மேடு, குண்டலப்பட்டு, கருகன்சாவடி, கத்தேரி, மேல் மக்கான், பனகமுட்லு, தளியூா், தொட்டிப்பள்ளம், மோரனஅள்ளி, சாப்பா்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி, குட்டி வேடிச்சம்பட்டி, மலையாண்டஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
