கிருஷ்ணகிரி
இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த விவசாயி உயிரிழப்பு
சூளகிரி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து சாலையில் விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.
சூளகிரி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து சாலையில் விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.
சூளகிரியை அடுத்த ஒட்டா்பாளையத்தை சோ்ந்தவா் ராகவன் (55), விவசாயி. கடந்த அக்.20 ஆம் தேதி இரவு கிருஷ்ணகிரி- ஒசூா் தேசிய நெடுஞ்சாலை சூளகிரி சிப்காட் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்து வாகனத்துடன் சாலையில் விழுந்த ராகவன் பலத்த காயமடைந்தாா். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
