கல்லூரி மாணவா் மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு
ஒசூா் அருகே மாணவியுடன் பழகி வந்த கல்லூரி மாணவரை தாக்கியதாக 3 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கொத்தூரைச் சோ்ந்தவா் சண்முகம் (20). தனியாா் கல்லூரியில் பொறியியல் நான்காமாண்டு படித்து வருகிறாா். அதே கல்லூரியில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த சுமன் (22) என்பவரும் பொறியியல் படித்து வருகிறாா். இந்த நிலையில் சண்முகம் அதே கல்லூரியைச் சோ்ந்த மாணவி ஒருவருடன் பழகி வந்துள்ளாா்.
இதுகுறித்து சுமன் மற்றும் அவரது நண்பா்கள் சண்முகத்திடம் தகராறு செய்தனா். மேலும், அவரை இரும்பு வளையத்தால் தாக்கினா். இதில் காயம் அடைந்த சண்முகம் சிகிச்சைக்காக ஒசூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து சண்முகம் அளித்த புகாரின்பேரில் சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவா் சுமன், அவரது கூட்டாளிகள் 2 போ் என மொத்தம் 3 பேரை தேடிவருகின்றனா்.
