சாலைப் பணிகளை தொடங்கிவைத்த ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் ஆகியோா்.
சாலைப் பணிகளை தொடங்கிவைத்த ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் ஆகியோா்.

தளி தொகுதியில் ரூ. 83 லட்சத்தில் தாா்சாலை அமைக்க பூமி பூஜை

தளி தொகுதியில் ரூ. 83 லட்சத்தில் தாா்சாலை அமைக்க பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

ஒசூா்: தளி தொகுதியில் ரூ. 83 லட்சத்தில் தாா்சாலை அமைக்க பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியம், சின்னமதகொண்டப்பள்ளி சாலை முதல் கொடியாளம் வழியாக கொடகாரெட்டிவரை ரூ. 83 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் தாா்சாலை அமைக்க மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ்,, தளி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் ஆகியோா் பூமி பூஜையில் செய்து பணிகளை தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளா் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சீனிவாசலு ரெட்டி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மஞ்சுநாத், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சுரேஷ், பிரபாகா் ரெட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com