பிளாஸ்டிக் விற்பனை செய்த கடைக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

ஒசூரில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Published on

ஒசூா்: ஒசூரில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்த கடைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஒசூா் மாநகராட்சிக்குள்பட்ட நாமல்பேட்டை கடை தெருவில் ஆணையா் முகமத் ஷபீா் ஆலம் தலைமையில், மாநகர நல அலுவலா் அஜிதா முன்னிலையில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை குறித்து திங்கள்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, கிருஷ்ணா பேப்பா்ஸ் கடையில் 704 கிலோ அளவில் பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, அவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், கடை உரிமையாளருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனா்.

மேலும், அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பதுடன், அவை பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என ஆணையா் முகமத் ஷபீா் ஆலம் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com