Enable Javscript for better performance
நிழல் வலையில் காய், கனி சாகுபடி: ஏப். 9-இல் இலவசப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    நிழல் வலையில் காய், கனி சாகுபடி: ஏப். 9-இல் இலவசப் பயிற்சி

    By நாமக்கல்  |   Published on : 03rd April 2013 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிழல் வலையில் தக்காளி, கொத்தமல்லி, புதினா, கீரை சாகுபடி செய்வது குறித்து, நாமக்கல்லில் ஏப்ரல் 9-ஆம் தேதி விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் பா.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    நிழல் வலையில் தக்காளி, கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை சாகுபடி செய்வது குறித்த ஒருநாள் இலவசப் பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் நிழல் வலைகளில் காய்கறிகள், கீரை வளர்ப்பதன் முக்கியத்துவம், அமைக்கும் முறைகள், சாகுபடி செய்யப்படும் காய்கறிகள், கீரை வகைகள், நாற்றுகள் உற்பத்தி, பசுமைக் குடில்களில் வளர் மேடை அமைக்கும் முறை, நீர்ப்பாசன முறை, ஒருங்கிணைந்த உர மேலாண்மை, அடியுரம், நீர்வழி உரமளித்தல், நிலப் போர்வை அமைத்தல், வடிவமைப்பு மற்றும் அறுவடை குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும்.

    இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

    விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நேரிலோ அல்லது 04286-266345, 266244, 266650 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு வரும் 8-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai