சுடச்சுட

  

  மதிப்புக் கூட்டிய காளான் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

  By நாமக்கல்  |   Published on : 18th March 2014 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காளானிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு குறித்த இலவசப் பயிற்சி நாமக்கல்லில் மார்ச் 25-ஆம் தேதி அளிக்கப்பட உள்ளது.

  மோகனூர் சாலை வேளாண் அறிவியல் நிலையத்தில் அன்று காலை காலை 9 மணிக்கு நடத்தப்பட உள்ள இந்தப் பயிற்சியில், காளானிலுள்ள சத்துக்கள், அதிலிருந்து தயாரிக்கப்படும் மதிப்புக் கூட்டப்பட்டப் பொருள்கள் குறித்து செயல் விளக்கங்கள் அளிக்கப்படும். இதில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர் பெருமளவில் பங்கேற்கலாம்.

  விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ 24-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  மேலும் விவரங்களுக்கு 04286-266345, 266244, 266650 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம் என, வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.மோகன் வெளியிட்ட

  செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai