Enable Javscript for better performance
\\\"இந்தியக் கல்வி முறையில் மாற்றம் தேவை\\\'- Dinamani

சுடச்சுட

    

    உயர் கல்வி பெறும் மாணவர்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு தற்போதைய கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம் என, இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் சன்ஜிப்குமார் பட்நாயக் குறிப்பிட்டார்.
     ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்கள் சார்பில்,
     "டெக்பெஸ்டா-14' என்ற தேசிய அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவை பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் விழாவுக்கு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் அகில இந்தியத் தொழில்நுட்பக் கழக இயக்குநர் சன்ஜிப் குமார் பட்நாயக் விழா மலரை வெளியிட்டுப் பேசியது:
     கல்வி என்பது ஒருவருக்கு மிகவும் அவசியமானது. அத்தகைய கல்வி தரமானதாக இருக்க வேண்டும். கற்பித்தல் முறையில் வகுப்பறைக் கல்வி, போதனா முறைக் கல்வி போன்ற பல்வேறு வகைகள் உள்ளன.
     தற்காலத்தில் உயர்கல்வியானது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய கல்வி முறை மாற்றப்பட வேண்டும். இன்றைய கல்லூரி கல்வி முறையால் ஆசிரியர்கள், துறைத் தலைவர்கள், நிர்வாகத்தினர், அரசாங்கம் ஆகிய அனைவரின் மீதும் பழி சுமத்தப்படுகிறது. ஆனால், இந்தியாவில் பள்ளிக் கல்வி நல்ல முறையில் உள்ளது.
     ஆனால், உயர்கல்வி பெறும் அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்பைப் பெறுவது இல்லை. தரம் வாய்ந்த கல்லூரிகளில் படித்தாலும்கூட வேலைவாய்ப்பு பெறுவது கடினமாக உள்ளது. இவை அனைத்துக்கும் காரணம் கல்வி முறை மட்டுமே.
     உயர்கல்வி முறையானது தொழில் சார்ந்த கல்வி முறையாகத் திகழ வேண்டும். மாணவர்களுக்கு கல்வியுடன் கூடிய தனித் திறமைகள் வேண்டும். அத்துடன்,
     நல்ல பழக்க வழக்கங்கள் அவசியம் என்றார்.
     இந்த விழாவில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலுள்ள பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து, தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு தனித் திறமைகளையும் வெளிப்படுத்தினர்.
     போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார்.
     கருத்தரங்கில் இயக்குநர் (வேலைவாய்ப்பு) எஸ்.சீனிவாசன், மூத்த முதல்வர் முனைவர் கே.கே.ராமசாமி, முதல்வர் கே.செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai