Enable Javscript for better performance
இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி- Dinamani

சுடச்சுட

    

    இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

    By  ராசிபுரம்,  |   Published on : 27th March 2014 10:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால், ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து நீதிமன்ற உத்தரவுப்படி புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
     ராசிபுரம் மலைவேப்பங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (60). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 30.4.2009-இல் குள்ளாண்டிக்காடு பகுதியில் இருந்து ராசிபுரம் நோக்கி வந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்தார்.
     ராசிபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்த அந்தப் பேருந்து அங்கு நின்றது. அப்போது ராஜா பேருந்தை விட்டு இறங்க முயன்றார்.
     அப்போது பேருந்து திடீரென புறப்படவே அவர் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது.
     பாதிக்கப்பட்டோர் சார்பில் வழக்குரைஞர் வி.சுந்தரம் நீதிமன்றத்தில் வாதாடினார்.
     இதில், உயிரிழந்த ராஜா குடும்பத்துக்கு இழப்பீடாக அரசுப் பேருந்து நிர்வாகம் ரூ.3 லட்சம் தர வேண்டும் என 9.4.2011-ல் நீதிபதி குணசேகரன் தீர்பளித்தார்.
     ஆனால், பல ஆண்டுகளாகியும் இதுவரை அரசுப் பேருந்து நிர்வாகம் இழப்பீடு தராததால், வட்டியுடன் சேர்த்து ரூ.3.50 லட்சம் தர வேண்டும் என மீண்டும் உத்தரவிடப்பட்டது.
     இதன் பிறகும் அரசுப் பேருந்து நிர்வாகம் இழப்பீடு தராததால், தற்போதைய சார்பு நீதிமன்ற நீதிபதி சாய்சரவணன் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
     இதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை ஜப்தி செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai