Enable Javscript for better performance
திருச்செங்கோடு அருகே 8 ஊராட்சிகள்தேர்தலைப் புறக்கணிக்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோடு அருகே 8 ஊராட்சிகள்தேர்தலைப் புறக்கணிக்க முடிவு

    By  திருச்செங்கோடு  |   Published on : 27th March 2014 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு அருகே 8 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வருகிற மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
     திருச்செங்கோடு ஒன்றியத்தில் உள்ளன ஏ.இறையமங்கலம், டி, கவுண்டம்பாளையம், மொளசி, பட்லூர், எஸ்.இறையமங்கலம், பிரிதி, ஏமப்பள்ளி, சிக்கநாய்கன்பாளையம் ஆகிய ஊராட்சிகள்.
     திருச்செங்கோடு வருவாய் வட்டத்தை இரண்டாகப் பிரித்து, குமாரபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
     இது நடைமுறைக்கு வரும் போது மேற்கண்ட ஊராட்சிப் பகுதிகள் குமாரபாளையத்துடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது. இதை இந்த ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏற்கவில்லை.
     இந்த ஊராட்சிகளைச் சேர்ந்த அதிமுக தலைவர்கள் உள்பட அனைவரும் தங்கள் ஊராட்சியை குமாரபாளையத்துடன் சேர்க்கக் கூடாது என்று வருவாய்க் கோட்டாட்சியர் செங்கோட்டையனிடம் மனு அளித்தனர்.
     குமாரபாளையம் தூரத்தில் உள்ளதால் தங்களது ஊராட்சிகளை அதனுடன் சேர்க்க அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
     ஆனால், அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதில் தாமதித்து வருகின்றனர்.
     எனவே, இதுகுறித்து தங்களுக்கு அரசு ஏதாவது ஒரு பதிலை விரைந்து அளிக்க வேண்டும். இல்லையேல், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
     இதனிடையே, அரசு முடிவெடுக்காமல் தாமதித்து வருவதைக் கண்டித்து, இந்த ஊராட்சிகளில் வீடுகளில் புதன்கிழமை கருப்புக் கொடி ஏற்றினர்.
     பிரிதி ஊராட்சியில் ஊராட்சி மன்றம் எதிரில் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai