Enable Javscript for better performance
திருச்செங்கோடு கல்லூரி மாணவர் கொலை: 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்செங்கோடு கல்லூரி மாணவர் கொலை: 5 பேர் கைது

    By  திருச்செங்கோடு,  |   Published on : 27th March 2014 10:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செங்கோடு கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
     திருச்செங்கோடு கொல்லபட்டி காலனியில் வசித்தவர் அலெக்சாண்டர் (19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு இவரது சடலம் பெருமாள்மலை அருகில் ஆள்கள் நடமாட்டமில்லாத தரிசுக் காட்டில் கிடந்தது. உடல் பூச்சி அரித்து அடையாளம் காண மடியாத நிலையில் இருந்தது.
     அருகில் கிடந்த கல்லூரி புத்தகங்கள், பை, டிபன் பாக்ஸ் ஆகியவற்றை வைத்து இறந்தது அலெக்சாண்டர் என்று தெரிய வந்தது. போலீஸார் இதை சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
     இந்த நிலையில், பிரகாஷ் என்பவரது கொலை வழக்கில் பிடிபட்ட சிலரிடம் விசாரணை நடைபெற்ற போது அலெக்சாண்டர் கொலையில் இவர்களுக்கு தொடர்புள்ளது தெரிய வந்தது. சிலரை கைது செய்து போலீஸார் விசாரித்ததில் அலெக்சாண்டர் எப்படி கொல்லப்பட்டார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
     இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது:
     2008-இல் அலெக்சாண்டரும், அவருக்கு வேண்டிய ஒரு பெண்ணும் சுடுகாட்டுப் பக்கம் உள்ள தனியிடத்துக்குச் சென்றனர். இதைக் கண்ட அங்கு மது குடித்துக் கொண்டிருந்த கும்பல் அந்தப் பெண்ணிடம் வரம்பு மீற ஆரம்பித்தனர். அப்போது, அந்தப் பெண் தப்பி ஓடிவிட்டார். மது போதையில் இருந்த அவர்களால் அந்தப் பெண்ணை பிடிக்க முடியவில்லை. இதனால், அவர்கள் கோபம் அடைந்தனர். அலெக்சாண்டரை அடித்துக் கொன்றனர். பின்னர், அவரின் சடலத்தை மோட்டார்சைக்கிளில் எடுத்துச் சென்று பெருமாள்மலை அருகில் போட்டனர் என்பது தெரிய வந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
     இந்தக் கொலை வழக்கு தொடர்பாக மணிகண்டன், சதீஷ்குமார், ரமேஷ், லோகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர். புதன்கிழமை கொல்லபட்டி பாலிக்காட்டைச் சேர்ந்த தேவராஜ் (25) கைது செய்யப்பட்டார். மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai