Enable Javscript for better performance
பிளஸ் 2 மாணவிகளின் உயர் கல்விக்கு ரூ 3 கோடி நிதி உதவி:  விவேகானந்தா கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பிளஸ் 2 மாணவிகளின் உயர் கல்விக்கு ரூ 3 கோடி நிதி உதவி:  விவேகானந்தா கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு

    By  திருச்செங்கோடு,  |   Published on : 27th March 2014 10:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அமைந்துள்ள விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில இலவசக் கல்வி, கட்டணச் சலுகை வழங்கப்பட உள்ளது.
     இதுகுறித்து விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மு. கருணாநிதி புதன்கிழமை கூறியது:
     மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலையால் தங்கள் உயர்கல்வியைத் தொடர முடியாமல் பள்ளிப் படிப்புடன் நின்று விடும் மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் விவேகானந்தா அறிவுத்திறன் தேர்வு மூலம் ரூ. 3 கோடி மதிப்பில் 200 மாணவிகளுக்கு பொறியியல், கலை அறிவியல், பாரா மெடிக்கல் கல்லூரிகளில் இலவசக் கல்வி, கட்டணச் சலுகை கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
     இந்தக் கல்வியாண்டும் (2014- 2015) இலவசக் கல்வி, கட்டணச் சலுகைக்கு தகுதியான 200 மாணவிகளைத் தேர்ந்தெடுக்க அறிவுத்திறன் தேர்வு வருகிற 30ஆம் தேதி திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவன வளாகத்தில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது.
     பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவிகளும் இந்தத் தேர்வை எழுதுவதற்கு தகுதியுடையவராவர். இந்தத் தேர்வில் இடம்பெறும் கேள்விகள் அனைத்தும் பிளஸ் 2-இல் மாணவிகள் படித்த பாடப் பகுதிகளில் இருந்து மட்டும் கொள்குறி வினாக்களாகக் கேட்கப்படும்.
     பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், விவேகானந்தா அறிவுத்திறன் தேர்வு 2014-இல் பெற்ற மதிப்பெண்கள், குடும்பப் பொருளாதாரச் சூழ்நிலை ஆகிய மூன்றின் அடிப்படையில் இலவசக் கல்வி, கட்டணச் சலுகைக்கு 200 மாணவிகள் தேர்வு செய்யப்படுவர். தகுதி பெறும் மாணவிகளுக்கு பொறியியல், கலை, அறிவியல், பாரா மெடிக்கல் கல்லூரிகளில் படிப்புக் காலம் முடியும் வரை இலவசக் கல்வி, கட்டணச் சலுகை வழங்கப்படும். விடுதிக் கட்டணத்தை மட்டும் மாணவிகள் செலுத்த வேண்டும்.
     அறிவுத்திறன் தேர்வில் பங்குபெற விரும்பும் மாணவிகள் இதுவரை தங்கள் பெயரை பதிவு செய்யாமல் இருந்தால், தேர்வு நடைபெறும் 30.03.2014 அன்று காலை 9 மணிக்குள் தங்களது பெயரை எங்கள் கல்வி நிறுவனத்தில் நேரில் பதிவு செய்து கொண்டு தேர்வு எழுதலாம். மாணவிகள் தேர்வு எழுதி செல்வதற்கு வசதியாக தேர்வு நாளான 30.03.2014 அன்று காலை 7.00 மணியளவில் தருமபுரி, கொளத்தூர், மேட்டூர், ஓமலூர், இளம்பிள்ளை, எடப்பாடி, சங்ககிரி, ஆத்தூர், திருப்பூர், வெள்ளகோவில், பெருந்துறை, சத்தியமங்கலம், கோபி, பங்களாபுதூர், அந்தியூர், பவானி, ஈரோடு, கரூர், பரமத்தி வேலூர், நாமக்கல், ராசிபுரம், சேலம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய இடங்களிலிருந்து இலவசப் பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாவட்ட மாணவிகள் பயன்பெறும் வகையில், காலை 6.00 மணியளவில் கல்லூரியின் பேருந்துகள் இலவசமாக இயக்கப்படும்.
     தேர்வு எழுத வரும் மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம். மேலும் விவரங்கள் வேண்டுவோர் 04288 234670 , 99655 34670, 99655 34670 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த நல்ல வாய்ப்பை மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai