Enable Javscript for better performance
பைக்கில் சென்றவர் பாலத்தில் மோதி சாவு- Dinamani

சுடச்சுட

    

    வேலகவுண்டம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றவர் பாலத்தின் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை உயிரிழந்தார்.
     திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள தேவனூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கார்த்திக் (24). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு லாரி பட்டறையில் வேலை பார்த்து வந்தார். கடந்த திங்கள்கிழமை மாலை வேலையை முடித்துவிட்டு நாமக்கல் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
     அப்பொழுது வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சிங்கிலிபட்டி பாலம் அருகே சென்ற போது கார்த்திக் நிலை தடுமாறி பாலத்தின் மீது மோதினார். இதில், பலத்த காயமடைந்த அவர், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
     இந்த நிலையில், புதன்கிழமை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai