Enable Javscript for better performance
10ஆம் வகுப்பு தேர்வு: முறைகேடுகளைத் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்- Dinamani

சுடச்சுட

    

    10ஆம் வகுப்பு தேர்வு: முறைகேடுகளைத் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்

    By  நாமக்கல்,  |   Published on : 27th March 2014 10:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு புதன்கிழமை தொடங்கியது. முறைகேடுகளைத் தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
     தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு புதன்கிழமை தொடங்கியது. இந்தத் தேர்வை எழுத நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் இருந்து 24,887 மாணவர்களும், தனித் தேர்வர்கள் 1245 பேர் என மொத்தம் 26,132 பேர் விண்ணப்பித்தனர்.
     தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 80 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வுப் பணிகளில் அறை கண்காணிப்பாளர்கள் 1961, துறை அலுவர்கள் 80, முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 80, பறக்கும் படை அலுவலர்கள் 479, வழித் தட அலுவலர்கள் 17, வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
     தேர்வையொட்டி, காலை 9 மணிக்கு மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, 9.15 மணியளவில் விடைத்தாள் வழங்கப்பட்டு, அவற்றில் பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் பூர்த்தி செய்த பிறகு 9.30 மணி முதல் வினாத்தாள் அளிக்கப்பட்டு தேர்வுகள் தொடங்கப்பட்டன.
     தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க பிளஸ் 2 தேர்வுகளைப் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
     இதன்படி, அறை கண்காணிப்பாளர் மாணவர் முன்னிலையில் தேர்வு அறையிலேயே விடைத்தாள் கட்டுகளைப் பிரித்து மாணவர்களுக்கு அளித்தார்.
     இதேபோல, தேர்வு முடிந்த பிறகும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விடைத்தாள்கள் உறைக்குள் வைக்கப்பட்டு "சீல்' இடப்பட்டு, முதன்மைக் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்டது. அந்த "சீல்' இடப்பட்ட உறைகளை வழித்தட அலுவலர்கள் பெற்று கட்டுக் காப்பகத்தில் சேர்த்தனர்.
     மாணவர்கள் காப்பியடிப்பதைத் தடுக்க கடந்தாண்டைவிட கூடுதலாக பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, இரு அறைக்கு ஒரு அலுவலர் வீதம் கண்காணிக்கப்பட்டது.
     இந்த அதிரடி நடவடிக்கைகள் மூலம் முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க முடியும் என்று மாவட்டக் கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
     இந்த நிலையில், நாமக்கல் நல்லிப்பாளையத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பார்வையிட்டார்.
     இந்த ஆண்டு தேர்வுகள் 9.30 மணிக்கே தொடங்க உத்தரவிடப்பட்டிருந்ததை அடுத்து, கிராமப்புற மாணவர்கள் சற்று சிரமத்துக்குள்ளாகினர்.
     எனினும், வெயில் அதிகரிக்கும் நண்பகலுக்கு முன்பாகவே தேர்வு முடிந்ததால் ஆர்வமுடன் தேர்வை எழுத முடிந்ததாகவும் மாணவர்கள் சிலர் தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai