சுடச்சுட

  

  ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூர் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் விடிய விடிய பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.

  இந்தக் கோயிலின் ஆண்டு திருவிழா அக்டோபர் 30-இல் தொடங்கியது.

  இதைத்தொடர்ந்து, இந்தக் கிராம வழக்கப்படி, அக்டோபர் 28 முதல் அக்டோபர் 30 நள்ளிரவு வரை மூன்று நாள்களுக்கு கூனவேலம்பட்டிபுதூர், பாலப்பாளையம், தோனமேடு,

  ஆனைக்கட்டிபாளையம், கரையாண்தின்னிபுதூர், ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் அரிசி சாதம், குழம்பு, அசைவ உணவுகளைத் தவிர்த்து, ராகி, கம்பு,

  சோளம், கேழ்வரகு, கோதுமை போன்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்து வழிபட்டு வந்தனர்.

  இதைத்தொடர்ந்து, முக்கிய நிகழ்வான பொங்கல் விழாவையடுத்து வியாழக்கிழமை இரவு விரதத்தை முடித்து, கோயில் வளாகத்தில் ஊர் பொதுமக்கள் அனைவரும்

  பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. கண்ணைக் கவரும் வாண வேடிக்கைகளும்,

  மேளதாளத்துடன் காவடி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை மகா பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai