Enable Javscript for better performance
தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியேற்பு- Dinamani

சுடச்சுட

    

    நாமகிரிப்பேட்டை வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, வாழப்பாடி கூ.ராமமூர்த்தி ஆகியோரது நினைவு நாள் கடைப்பிடிப்பு, தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி வடுகம் முனியப்பம்பாளையம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இதில், வாட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் சி.சௌந்திரராஜன் தலைமை வகித்தார். வட்ட வீட்டு வசதி சங்க இயக்குநர் பிள்ளாநல்லூர் நாகராஜ் வரவேற்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பவானி கார்த்திக், மாது, விஸ்வநாதன், சேகர், நடேசன், சுந்தரம், பழனிசாமி, ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பின்னர் நடைபெற்ற சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினா விழாவில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai