சுடச்சுட

  

  மழைநீரை முழுமையாகச் சேமிக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள், நீர்வரத்துக் கால்வாய்களை

  தூர்வார அதிகாரிகளுக்கு தமிழக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி உத்தரவிட்டார்.

  வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்யும் மழைநீரைச் சேமித்தல், மழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது

  தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில், அமைச்சர் பி.தங்கமணி பேசியது:

  நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 716.54 மில்லி மீட்டர். இதில், அக்டோபர் மாதம் வரையில் சராசரியாக 557.28 மிமீ மழை பெய்திருக்க வேண்டும்.

  ஆனால், நிகழாண்டு 502.54 மிமீ மழையே பெய்துள்ளது. இது சுமார் 9.8 மிமீ குறைவாகும். கடந்த சில நாள்களுக்கு முன்பு வடகிழக்குப் பருவ மழை காரணமாக பலத்த மழை

  பெய்து, நாமக்கல் மாவட்டத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டன.

  இதன்படி, அக்டோர் 15-ஆம் தேதி திருச்செங்கோடு வட்டத்தில் ஒரு பெண் மின்னல் பாய்ந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.1.50 லட்சம்

  வழங்கப்பட்டது. தவிர, மழைநீர் புகுந்து மாவட்டம் முழுவதும் 48 வீடுகள் சேதமடைந்துள்ளன. அந்தக் குடும்பங்களுக்குத் தேவையான நிவாரணம், உதவிப்பொருள்கள்

  வழங்கப்பட்டுள்ளன. சரிந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த மழைநீரைச் சேமிப்பது அவசியமாகும். இதற்காகவே மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிக்கும் திட்டத்தை

  இந்த அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. எனவே, மழைக் காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமிப்பதற்கு ஏதுவாக ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவற்றைத்

  தூர்வாரி செம்மைப்படுத்தவும், அவற்றின் கரைகளைப் பலப்படுத்தவும் அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மேலும், நீர்வரத்துக் கால்வாய்களையும் தூர்வாரி ஏரிகளுக்கு மழைநீர் தடையின்றி வந்து சேரவும் வழிவகை செய்ய வேண்டும். அத்துடன், மழையால் பாதிப்புகள் ஏற்படாத

  வகையில், அனைத்துத் துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திட வேண்டும் என்றார் அவர்.

  மக்களவை உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், உ.தனியரசு, மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஆர்.சுப்புலட்சுமி, மாவட்ட ஊரக வளர்ச்சி

  முகமையின் திட்ட இயக்குநர் சி.மாலதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காந்திமுருகேசன், நாமக்கல் நகர்மன்றத் தலைவர் ஆர்.கரிகாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai