சுடச்சுட

  

  தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் (இஎஸ்ஐ) சார்பில், குமாரபாளையத்தைச் சேர்ந்த பஞ்சாலை தொழிலாளிக்கு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

  இதுகுறித்து இஎஸ்ஐ அலுவலகத்தின் பள்ளிப்பாளையம் கிளை மேலாளர் என்.தியாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம் (இஎஸ்ஐ) தொழிலாளர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி, நோய் காலங்களில்

  நிதியுதவியும் செய்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் குமாரபாளையத்திலுள்ள நரேந்திரகுமார் காட்டன் மில் என்ற பஞ்சாலையில் பணியாற்றி உடல்நிலை பாதிக்கப்பட்டத்

  தொழிலாளி பி.மனோகரனுக்கு இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் இலவசமாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து,டிசம்பர்

  25-ஆம் தேதி முதல் அவருக்கு தொடர் மருத்துவச் சிகிச்சையும், நோய் கால உதவித்தொகையாக இதுவரை ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

  இதுதவிர, கடந்த ஓராண்டுக்கு மேலாக அவர் பணிக்குச் செல்லாததால் அவரால் இஎஸ்ஐ சந்தா தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், அவருக்கும்,

  அவரது குடும்பத்தினருக்கும் 3 ஆண்டுகளுக்கு மருத்துவ உதவி வழங்கிட இஎஸ்ஐ நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எனவே, இஎஸ்ஐ திட்டத்தில் இணையாத

  தொழிலாளிகள் உடனடியாக அதில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai